This is some text!

Thursday, January 5, 2012

நான் படித்ததில் பிடித்தவை


கவனிக்க வேண்டியது
         யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள்
செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள்
விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள்
எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்.....


நிலை மாற்றம்


         பதவி,பணம் சிலரை மனிதர்கள் என்னும் நிலையிலிருந்து எப்படியெல்லாம் இறக்கி விடுகின்றது……


தோல்வியின் ஆரம்பம்


       எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன !!!



தேடுதல்:


       தெரிந்த விஷயங்கள் இருக்கின்றன, தெரியாத விஷயங்கள் இருக்கின்றன, இரண்டுக்கும் நடுவில் தேடுதல் இருக்கிறது ...


நிலமை:


      வெற்றி பெற்றவனிடம், அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.


நிதர்சனம்:


   எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால்,
இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான்
மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு.


கற்றதும் கல்லாததும்:


    நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது


தேவையான தேடல்:
    நாம் இறக்கும்போது நமக்காக அழக்கூடியவர்களை
நாம் உயிருள்ளபோதே தேடி வைத்து கொள்ளவேண்டும்....


பாதை:


     நீ போகும் பாதையில் எவ்வித தடங்கலும்
இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை...


பெண்மையின் ஒப்புமை:

    பெண்களை ஆண்கள் காவல் புரிவதால் பெண்மை தாழ்ந்ததன்று
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?.



உள்ளத்தின் கேள்வி:
    பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம்.
நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்


உழைப்பாளி,முதலாளி:

    'எப்படி?'என்று தெரிந்திருப்பவன் உழைக்கிறான்
ஆனால் 'ஏன்?' 'எதற்கு?' என்பதையும் தெரிந்திருப்பவன் ஊதியம் அழிக்கிறான்


விவாதம்:

   கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்...


இவைகளின் பொருள்:
     சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்???
நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.


சுதந்திரம் பறிக்க படும் நேரம்:

இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரத்தை பறி கொடுக்கிறாய்....






No comments: