This is some text!

Friday, September 9, 2011

...........உலக தற்கொலை ஒழிப்பு தினம் இன்று...........

.........போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை.......

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!
சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!
நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!

மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!! 
http://rammohan1985.wordpress.com/2010/06/28/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

Wednesday, September 7, 2011

Youth movement for Developed India 2020


Recently, in Hyderabad, I met a group of citizens who are putting into practice the motto of transforming of our youth into enlightened citizen. The Lead India 2020 Foundation created by Dr. N.B. Sudershan at Hyderabad is training thousands of students in many districts of Andhra Pradesh in partnership with the District Administration. Particularly, I happened to know the transformation which has taken place among the students of Medak district. As per the district authorities the impact of the training on the students is visible in terms of self-discipline, love for their parents and teachers shedding of stage fear and recognition of their duties towards the nation. I talked to Ms. Padma, a student leader from Andhra Pradesh Tribal Welfare School, Nalgonda who related how she weaned her father away from smoking after imbibing the spirit of the 10 point oath from the Lead India Training Camp. This gives me an assurance that the youth of our country are on the right path through this mission oriented programme. With the ignited minds of the 540 million youth below the age of 25, which I consider is the most powerful resource on the earth, under the earth and above the earth, we have to empower the youth through value based education and leadership

By, Dr. APJ Abdulkalam
www.abdulkalam.com

Sunday, September 4, 2011

எண்ணத்தில் உதித்தவை!!!

செய்யும் தவறுகளை தவறுயென உணர்ந்து!! திருந்த
நினைக்கிறேன் வழியில் பார்த்த மாற்றுத்திறனாளிகளை நினைத்து!!!

My first letter for my friend

உலகில் குழப்பங்களையும்,துன்பங்களையும் சந்திக்காமல் யார்?
வாழ்பவர் இருவர், ஒருவர் கருவில் அடுத்தவர் கல்லரையில்
மனித வேதனைகளின் வேற்றிதான் அனைத்து கண்டுபிடிப்புகளும்....

தெருவில் தினமும் கண் தெரியாதவர், காது கேட்காதவர்,பட்டினி கிடப்பவர்,
அனாதை,கைவிப்பட்டோர்,வாய் பேசாதோர்,ஆதரவற்றோர்...என
ஆயிரம் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை பார்க்க வில்லையா...
அவர்கள் அன்றாடம் படும் அல்லல்களைவிடவா உன் சுமை பேரிது
அவர்களும் உன்னைப்போன்ற இழிவான முடிவுகளை எடுத்தால் எண்ணாகும்!!

அனைத்தயும் புரிந்துகொள்ளும் உனக்கு ஏன் புரியவில்லை...
உலக நியதி...ஒன்றை தெளிவாக புரிந்து கொள் நாமும் மிருகம்தான்
வலி,துன்பம்,வேதனை,உண்பது,குடிப்பது,பிறப்பது,இறப்பது என்பதனைத்தும்
சமம்தான்,அவன் அல்லது அவள் வேறுபடுகிட்றான்(ள்) தன்னை பகுத்தறியும் போது!!!!

அவர் அப்பா, அவள் அம்மா, இவன் தம்பி அவர்கள் தான் நம் உறவினர்கள் என்றும்
இது நல்லது, அது கெட்டது, இது வேண்டும், அது வேண்டாம் என பகுத்தறியாதது விலங்கு!!!
அவளவுதான், மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசம், மற்ற ஆறு அறிவுகளும் அவைகளுக்கும் உண்டு
ஆனால் அவைகளும் நீ எண்ணுகின்ற செயல்களை செய்யாது!!!!

................................உனக்கு நான் சொல்லவருவது என்னவேன்றால்......................................

பொறுமையுடன் இருங்கள்!! கைகூடும் காலம் வெகுதொலைவில் இல்லை!!!
உன் தாய் பத்து மாத பொறுமையுன் இருந்தில்லாவிடில் நீ இப்பூமியில்
உன் பாதம் ஊன்றி இருப்பாயா?...இது நொடிப்பொழுது துன்பம் தான்.....
பல வசந்த காலங்கள் உள்ளன உன் வரவுக்காக ...எத்துணை எத்துணை பேர் உள்ளாரோ
உன் வாய்மொழிக்காக!!! உயர்ந்த எண்ணங்களையும், நல்ல ஆன்மீக நெறியிலும் வாழ ..........வாழ்த்துக்கள்!!!